காவலூர் எஸ்.ஜெகநாதன், கணபதி கணேசன், ஏ.எஸ்.உபைத்துல்லா. கொழும்பு: பா.தவபாலன், செவ்வந்தி பிரசுரம், இலங்கை சட்டக் கல்லூரி, 1வது பதிப்பு, ஜுன் 1978. (யாழ்ப்பாணம்: செட்டியார் அச்சகம்).
(4), 48 பக்கம், விலை: ரூபா 2.00, அளவு: 18×12.5 சமீ.
ஈழத்தின் மூன்று பிரபல எழுத்தாளர்களின் கதைகள், குறுநாவல், நெடுங்கதை ஆகியவற்றைக் கொண்ட தொகுப்பு இது. காவலூர் எஸ்.ஜெகநாதன் எழுதிய காலநதி, சோலையில் வீசிய புயல், பயணங்கள், தகுதிகள் பிறப்பினால் வருவதில்லை ஆகிய கதைகளையும் கணபதி கணேசன் எழுதிய ஒரு தாழம்பூ அர்ச்சிக்கப்படுகின்றது, புது யுகம் மலர்கின்றது ஆகிய கதைகளையும், ஏ.எஸ்.உபைத்துல்லா எழுதிய கடலின் குழந்தைகள், மண்ணின் மகன் ஆகிய கதைகளையும் கொண்ட நூல்; இது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 77225, 119462).