8605 கூடுகள் சிதைந்தபோது.

அகில் (இயற்பெயர்: சாம்பசிவம் அகிலேஸ்வரன்). தமிழ்நாடு: வம்சி புக்ஸ், 19, டி.எம்.சாரோன், திருவண்ணாமலை 606 601, 2வது பதிப்பு, ஜுன் 2012, 1வது பதிப்பு, டிசம்பர் 2011. (சென்னை 600 077: மணி ஆப்செட்).

183 பக்கம், விலை: இந்திய ரூபா 120., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-80545-56-1.

நூலாசிரியர் அகில் யாழ்ப்பாண மாவட்டத்தின் சரவணைக் கிராமத்தில் பிறந்தவர். 1991இல் புலம்பெயர்ந்து  இந்தியா, இலண்டன் ஆகிய இடங்களில் வாழ்ந்து தற்போது கனடாவில் வாழ்ந்து வருபவர். வயஅடையரவாழசள.உழஅ என்ற இணையத்தளத்தை கனடாவிலிருந்து இயக்கி வருபவர். இந்நூலில் வலி, அம்மா எங்கே போகிறாய்?, பதவி உயர்வு, ரேடியோப் பெட்டி, பெரிய கல்வீடு, கண்ணீர் அஞ்சலி, கிறுக்கன், இது இவர்களின் காலம், கூடுகள் சிதைந்தபோது, ஓர் இதயத்திலே, உறுத்தல், அண்ணாநகரில் கடவுள், வெளியில் எல்லாம் பேசலாம், தேடல் ஆகிய 14 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இந்நூலுக்கு பேராசிரியர் கா.சிவத்தம்பி, செங்கை ஆழியான், நா.சுப்பிரமணியன் ஆகியோர் அணிந்துரைகளை வழங்கியுள்ளனர். இந்நூல் தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றத்தின் எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி நினைவு விருது (2011), கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை இலக்கிய விருது (2011), மணிவாசகர் பதிப்பகம் – சிறந்த நூலுக்கான நூலாசிரியர் விருது (2011), கவிதை உறவு  சஞ்சிகையின் சிறந்த சிறுகதை நூலுக்கான அமரர் சு.சமுத்திரம் விருது (2011), புதுவை நண்பர்கள் தோட்டம் இலக்கிய விருது (2011), கவிஞாயிறு தாரா பாரதி அறக்கட்டளை- சிறந்த நூலுக்கான விருது (2011) ஆகியவற்றைப் பெற்றுள்ளதென்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏனைய பதிவுகள்