குப்பிளான் ஐ.சண்முகம் (இயற்பெயர்: ஐயாத்துரை சண்முகலிங்கம்). யாழ்ப்பாணம்: அலை வெளியீடு, 6, மத்திய மேற்குத் தெரு, குருநகர், 1வது பதிப்பு, டிசம்பர் 1976. (யாழ்ப்பாணம்: பஸ்தியான் அச்சகம், பிரதான வீதி).
104 பக்கம், விலை: ரூபா 4.50., அளவு: 18.5×12.5 சமீ.
இரண்டாவது அலை வெளியீடாக உருவாகியுள்ள சிறுகதைத் தொகுப்பு. இதில் ஆசிரியர் எழுதிய பதினொரு கதைகள் இடம்பெற்றுள்ளன. இருளிலிருந்தே ஒளி பிறக்கின்றது, ஒரு ரெயில் பயணம், மௌனகீதம், வேட்டைத் திருவிழா, தடங்கள், ஒரு பாதையின் கதை, உணர்ச்சிகள், இணை, இலுப்பைமரமும் இளஞ்சந்ததியும், எல்லைகள், வலி ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. குப்பிளான் ஐ.சண்முகம் 1946இல் பிறந்தவர். குப்பிழான் விக்கினேஸ்வரா வித்தியாசாலை, புன்னாலைக்கட்டுவன் மெதடிஸ்த மிஷன் ஆங்கிலப் பாடசாலை, தெல்லிப்பழை யூனியன் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர். யாழ்ப்பாணக் கல்வி அலுவலகத்தில் எழுதுவினைஞராகப் பணியாற்றியவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 119288).