சோ.ராமேஸ்வரன். கொழும்பு 5: சோ.ராமேஸ்வரன், 4 ½ சித்ரா ஒழுங்கை, 1வது பதிப்பு, 1994. (கொழும்பு: அச்சக விபரம் அறியமுடியவில்லை).
iv, 94 பக்கம், படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.
ஈழத்துச் சிறுகதை உலகில் கால்பதித்த முதல் கால் நூற்றாண்டுக் காலத்தில் ஆசிரியர் எழுதி வீரகேசரி வார மலரில் வெளியாகிய கதைகளுள் தேர்ந்த பத்துக் கதைகளை இத்தொகுப்பில் சேர்த்துள்ளார். ஒரு ஆறு வழி பிரித்து ஓடுகின்றது, விழித்தெழும் உணர்வுகளுக்குச் சாட்டை, தொடரும் சிறுகதை, சுதந்திரக் காற்று, என்று தணியும் இந்தப் போராட்டம், டில்ருக்ஷியும் ஒரு பாலன் ஐயாவும், மிஸிஸ் சமரக்கொடியின் அனெக்ஸ், ஒரு ஆச்சரியக்குறி கேள்விக்குறியாகிறது, சொந்த மண், மண்ணை நம்பி ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 111368).