8611 சொர்க்கத்தில் முடிவான பந்தங்கள்: சிறுகதைகள். 

நீ.பி.அருளானந்தம். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2010. (சென்னை 94: பி.வி.ஆர். ஆப்செட்).

xii, 340 பக்கம், விலை:  ரூபா 650., அளவு: 18.5×12.5 சமீ.

நீக்கிலாப்பிள்ளை பிலிப்பையா அருளானந்தம் ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்களுள் முக்கியமான ஒருவர்.இவரது துயரம் சுமப்பவர்கள் நாவல் பலத்த வரவேற்பைப் பெற்ற ஒன்று. வர்ணனை விஸ்தாரங்களுக்கு இடம்கொடுக்காமல் பொருளும் அது பற்றிய புரிவும் தனக்குள் இயைந்து நிற்கின்ற முறைமையினை இவரது எழுத்துக்களில் காண முடிகின்றது. இந்நூலில் அருளானந்தத்தின் 32 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இவை சொர்க்கத்தில் முடிவான பந்தங்கள், அமெரிக்காவில ;ஒரு மாங்கன்று, தாகம், எங்கள் தேசத்தன் சங்கதி, வீட்டுத் தோட்டம், ஓய்வூதியம், நித்திய கல்யாணி, கண்ணீர் கலந்த கடல், சாமியார்ப் பைத்தியம், மாற்றங்களை மறுப்பதற்கில்லை, உறவு உறவு என்றாலும், ஆறாத புண்கள், எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை, கற்பக தரு, இங்கே இப்படியும் ஒருத்தி, ஊரும் உறவும், மண்வாசனை, இழப்பு, ரசனை, லட்சியவாதி, நத்தார் மழை, ராசியான கடிதம், சோகமுள், அன்பளிப்பு, கபளீகரம், நாணயம், விழுதுகள், வசந்தம் வந்தது, புது யுகம், காத்திருத்தல், பழிமுடிச்சு, அவர்களுக்குள்ளும் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 219398).

ஏனைய பதிவுகள்

Free Spins Requirements and Bonuses

Content C$15 No-deposit Bonus As the 50 100 percent free Revolves In the BETONRED Starda Gambling establishment No-deposit Extra – 50 Free Spins to the