8628 ஃபீனிக்ஸ் பறவைகளாய் எழுவோம்: சிறுகதைகள்.

ச.முருகானந்தன். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2011. (சென்னை 600094: Script Offset).

xxii, 146 பக்கம், விலை: இந்திய ரூபா 75., அளவு: 18×12 சமீ., ISBN: 978-955-53041-1-05.

ஈழத் தமிழர்களின் வாழ்வில் இருண்ட காலத்தின் கதைகள் இவை. யுத்தத்தின் பின்னான ஈழத்தமிழரின் வாழ்க்கை இது. அவர்கள் போருக்குள் சிக்கி அல்லல்பட்டமையையும், உச்சகட்ட யுத்தக் கொடும்  நிகழ்வுகளையும், தப்பியவர்கள் முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் அனுபவித்த முகாம் வாழ்க்கையையும், பின்னர் துயருடன் சாம்பல் மேட்டில் மீள்குடியேற்றப்பட்ட அவர்களின் அவலங்களையும் இதிலுள்ள கதைகள் பதிவுசெய்கின்றன. போராளிகளின் தோல்வியுடன் பேரினவாதத்தால் கைவிடப்பட்ட தீர்வுத்திட்டத்தையும், மக்களுக்கு இன்னமும் அமைதி எதுவும் கிட்டவில்லை என்பதையும் சுட்டி நிற்கின்ற கதைகள். உச்ச கட்டம், அம்மா வந்தாள், வெறும் சோற்றுக்காக, எத்தனை கோடி துன்பங்கள், தாய்மடி மண், பஞ்சம் எப்போதும் தொடர்கதைதான், முள்வேலி, புலவு காத்த கிளி, நிர்வாணம், நெருப்பு மழை, என்னைப் போல் ஒருத்தி, ஃபீனிக்ஸ் பறவைகளாய் எழுவோம் ஆகிய பன்னிரு கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. 

ஏனைய பதிவுகள்

16621 இங்கு வீசியது ஒரு சமாதானக் காற்று: சிறுகதைத் தொகுப்பு.

சூசை எட்வேட். திருக்கோணமலை: கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், 1வது பதிப்பு, 2020. (திருக்கோணமலை: சிறீராம் அச்சகம் (ரிங்கோ பிரிண்டர்ஸ்), 158, தபால் நிலைய வீதி). 194 பக்கம், விலை: ரூபா 300., அளவு: