8632 மறுபடியும் ஒரு மனுநீதி.

ரவிப்ரியா (இயற்பெயர்: வை.க.ரவீந்திரன்). மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், 64 கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2008. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 44, ஸ்டேஷன் வீதி).

120 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 18×12.5 சமீ., ISBN: 978-955-8715-10-7.

1979-1997 காலகட்டத்தில் ரவிப்ரியா எழுதிப் பிரசுரமான 14 சிறுகதைகளின் தொகுப்பு. பெரும்பாலான சிறுகதைகள் எதுகை மோனை கொண்ட அழகிய கவிதை நடையில்  அமைந்திருப்பது குறிப்பிடத்தகுந்ததாகும்.  ஒரு ஆரம்பமும் அதன் முடிவும் என்ற கதை வதந்தியினால் ஏற்படும் கலவரம் பற்றிச் சுவையாகச் சொல்கின்றது.  மறுபடியும் ஒரு மனுநீதி, மக்களின் துன்பத்தைப் புரிந்துகொள்ளாது சுயநலநோக்கில் இயங்கும் ஒரு அரச அதிகாரியை மையமாகக்கொண்டு எழுதப்பட்டது. அவ்வாறே இத்தொகுப்பிலுள்ள அன்று நடந்தது இன்று, உனக்கு மட்டுமல்ல, இப்படியும் ஓர் இதயம், வரம்பில்லாத வாய்க்கால்கள், சுபா, தெய்வ காணிக்கை, சில நேரங்களில் சில பஸ்களில், ஒரு டாக்டர் நோயாளியாகிறார், அவர்கள் சிரிக்கிறார்கள், அர்த்தங்கள் தெளிவாகின்றன, வழியும் பழியும், வயதுக்கு வரும்வரை ஆகிய மற்றைய கதைகளும் எமது சமகாலச் சமூக வாழ்வியலை பதிவுசெய்வதாயுள்ளன.

ஏனைய பதிவுகள்