8654 உண்மை கலந்த நாட்குறிப்புகள்.

அ.முத்துலிங்கம். சென்னை 600018: உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், 1வது பதிப்பு, டிசம்பர் 2008. (சென்னை 600005: மணி ஆப்செட்).

288 பக்கம், விலை:  இந்திய ரூபா 170., அளவு: 21.5×13.5 சமீ. ISBN: 978-81-89912-94-9.

தமிழில் சுயசரிதைத் தன்மைகொண்ட புனைவுகளில் தன்னிரக்கமும் படைப்பூக்கமற்ற வெற்றுத் தகவல்களும் பொது இயல்பாகிவிட்ட சூழலில் முத்துலிங்கத்தின் இந்த நாவல், அந்த வகை எழுத்திற்கு ஒரு புதிய உத்வேகத்தையும் அழகியலையும் வழங்குகின்றது. ஆசிரியரின் கவனத்தையீர்க்கும் ஒவ்வொரு அனுபவமும் பக்கங்கள்தோறும் உயிர்பெற்று கலந்துறவாடுகின்றன.  எந்தவொரு சிறிய நிகழ்வையும் நினைவையும் ஒரு மர்மமான ரசவாதத்தால் வாழ்வின் தரிசனமாக மாற்றிவிடும் அவர் நவீனத் தமிழ் எழுத்திற்கு ஒரு புதிய நீரோட்டத்தை வழங்குகின்றார். இந்த நாவலின் சில பகுதிகள் தனி ஆக்கங்களாக வெளிவந்திருந்த போதும்,  இந்த வடிவத்தில்  அவை தமது உள்ளிணைப்புகளால் ஆழ்ந்த ஓர்மையை வெளிப்படுத்துகின்றன. அவரது புனைவின் நிழல் யதார்த்தத்தை மறைப்பதில்லை. மாறாக அவற்றை அதன் மந்தகதியிலிருந்து விடுவித்துப் பிரகாசமடைய வைக்கின்றது.

ஏனைய பதிவுகள்