இ.தியாகலிங்கம். சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 சக்காரியா காலனி, 1வது தெரு, சூளைமேடு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2010. (சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 சக்காரியா காலனி, 1வது தெரு, சூளைமேடு).
176 பக்கம், விலை: இந்திய ரூபா 100., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-89748-92-0.
நூலாசிரியர் தற்போது புலம்பெயர்ந்து நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் வாழ்ந்துவருகிறார். 1994இல் அழிவின் அழைப்பிதழ் என்ற நாவலினூடாக இலக்கிய உலகில் அறிமுகமான இவர், அழிவின் அழைப்பிதழ், நாளை, பரதேசி, வரம்ஆகிய வெற்றிகரமான நாவல்களை தொடர்ச்சியாக வெளியிட்டவர். விறுவிறுப்பான கதைசொல்லியாக இயங்கி, புலம்பெயர்ந்து வாழும் தமிழ்க் குடும்பமொன்றைத் தாக்கும் புதிய நெருக்கடியை ஒரு துப்பறியும் நாவல் போன்ற உணர்வினை வாசகர்களிடம் ஏற்படுத்துவதில் தியாகலிங்கம் வெற்றிகண்டுள்ளார். தமிழர்களின் பாரம்பரியமாக வந்த மரபுசார் விழுமியங்கள் புகலிட வாழ்வின் சிக்கல்களுக்குள்ளாவது இக்கதையில் அறிவுபூர்வமாகச் சொல்லப்படுகின்றது.