8679 படுக்கையின் கீழ் பாம்பு: நாவல் தொகுப்பு.

பசுந்தீவு கோவிந்தன். (இயற்பெயர்: இராமநாதன் கோவிந்தன்). வேலணை: கோ.சரோஜினிதேவி, சிற்பனை முருகன் வீதி, 5ம் வட்டாரம், 1வது பதிப்பு, ஜுன் 2012. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம்).

xii, 183 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

இந்நூலில் ஆசிரியரின் இரண்டு குறுநாவல்கள் இடம்பெற்றுள்ளன. படுக்கையின் கீழ் பாம்பு, மண்வாசனை ஆகிய இவ்விரு நாவல்களும் யாழ்ப்பாணத்துத் தீவகச் சமூக வாழ்வினை களமாகக் கொண்டவை. ஓய்வுபெற்ற வங்கி அதிகாரியான நூலாசிரியர் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 2003இலிருந்து இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருபவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  228959).

ஏனைய பதிவுகள்