செங்கை ஆழியான் (இயற்பெயர்: க.குணராசா). யாழ்ப்பாணம்: அறிவுக்களஞ்சிய நூல்வரிசை, வரதர் வெளியீடு, 84/3, மானிப்பாய் வீதி, 1வது பதிப்பு, 2006. (யாழ்ப்பாணம்: அச்சக விபரம் தரப்படவில்லை).
32 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 30., அளவு: 17.5×12 சமீ.
யாழ்ப்பாணத்தின் பிரபல்யமான நாட்டுக்கூத்தாக பூதத்தம்பி விலாசம் பதிவுபெற்றது. யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தரின் ஆட்சி அதிகாரம் நிலவிய காலகட்டத்தில் இராசவாசல் முதலியார்களில் ஒருவனாக இருந்த பூதத்தம்பி என்பவனின் சோக நாடகமாக இது ஆடப்பெற்று வந்தது. ஒல்லாந்தரின் ஆட்சிக்கு எதிராக இயங்கி மரணதண்டனைக்குள்ளான அந்தத் தமிழ் மறவனின் கதை இது. பல்வேறு வரலாற்று நூல்களிலும் பூதத்தம்பி பற்றி வெளிவந்த குறிப்புகளைப் பயன்படுத்தி செங்கை ஆழியான் பூதத்தம்பியை தற்கால வாசகனுக்கு மீள் அறிமுகம் செய்கின்றார். வரதர் வெளியீடாக வந்த அறிவுக்களஞ்சிய நூல்வரிசையில், யாழ்ப்பாண தேசம் (செங்கை ஆழியான்), கிரண்பேடி (எஸ்.பி.கிருஷ்ணன்), மனிதர்களின் தேவைகள் (சாமிஜீ) என்ற நூல்களைத் தொடர்ந்து நான்காவது நூலாக இது வெளிவந்துள்ளது.