செங்கை ஆழியான் (இயற்பெயர்: க.குணராசா). யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 75/10V, பிரவுண் வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2012. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 48B, புளுமெண்டால் வீதி).
100 பக்கம், விலை: ரூபா 225., அளவு: 22×14 சமீ., ISBN: 978-955-1624-18-7.
சாஹித்ய ரத்னா விருதுபெற்ற செங்கை ஆழியான் கலாநிதி க.குணராசாவின் 46ஆவது நாவல் இது. யாழ்ப்பாண இராச்சியத்தின் மன்னனான சங்கிலி செகராசசேகரனின் வரலாற்றைத் தழுவி எழுதப்பட்ட நாவல். இதுவரை வெளிவந்த சங்கிலி மன்னன் பற்றிய பல நூல்களில் சொல்லப்படாத விடயங்களை இந்நாவல் கொண்டுள்ளது. சங்கிலி மன்னன் ஒரு அரசனின் வைப்பாட்டியின் மகனாகச் சித்திரிக்கப்படுகின்றது. அவனுக்கு யாழ்ப்பாண அரசுக்கட்டிலேறும் வாய்ப்பே இல்லாத நிலையில்அப்பதவியை எப்படியாவது அடைந்தே தீரவேண்டும் என்ற நோக்கில் மூத்த இரண்டு பட்டத்து இளவல்களையும் சதியால் கொல்கின்றான். அவன் மன்னனாகிய வழி பிழையானதாயினும் நாட்டுமக்களுக்குத் துரோகம் இழைக்கவில்லை. நாட்டை அந்நியர்வசம் போகாது காத்தான். போர்த்துக்கேயருக்குத் திறை செலுத்த மறுத்தான். மதமாற்றம் ஒரு அரசியல் காரணி என்று கருதித் தான் ஆட்சி செய்த 34 வருட காலத்தில் மக்கள் மதம் மாறுவதை அனுமதிக்கவில்லை. மதம் மாறியவர்கள் நாட்டை விற்கவும் துணிவர் என்று அவன் கருதினான். மதம் மாறிய 600 குடிமக்களைப் பலிகொண்டதோடு, மதமாற்றத்திற்கு உதவிய பிரான்ஸிஸ் சேவியரையும் பலிகொண்டான். இவை அனைத்தும் இவ்வரலாற்று நாவலில் இழையோடியுள்ளன.