இ.தியாகலிங்கம். சென்னை 600024: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 32/9 ஆர்க்காடு சாலை, கோடம்பாக்கம், 1வது பதிப்பு, ஏப்ரல் 2009. (சென்னை 600024: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 32/9 ஆர்க்காடு சாலை).
232 பக்கம், விலை: இந்திய ரூபா 90., அளவு: 21×13.5 சமீ., ISBN: 978-81-89748-75-3.
இந்நூலில் வரம், விளையாட்டு, மாசு, முடங்கள் ஆகிய நான்கு குறுநாவல்கள் இடம்பெற்றுள்ளன. வரம் என்ற தலைப்புக் கதை கருணைக்கொலை பற்றிய கருத்துக்களை யதார்த்தச் சூழலில் முன்வைக்கின்றது. நோர்வே மருத்துவவிடுதியொன்றில் தாதியாகக் கடமையாற்றும் வேணியின் பணிகளினூடாகக் கதை நகர்த்தப்படுகின்றது. மற்றைய மூன்று கதைகளிலும் ஊடுபாவாக ஓடும் கருத்துக்களும் மேற்குலகின் சமூக அக்கறையாளர் சிரத்தைகொள்ளும் விடயங்களே. நூலாசிரியர் தற்போது புலம்பெயர்ந்து நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் வாழ்ந்துவருகிறார். 1994இல் அழிவின் அழைப்பிதழ் என்ற நாவலினூடாக இலக்கிய உலகில் அறிமுகமான இவர் தொடர்ந்து நாளை என்றவெற்றிகரமான நாவலைத் தந்தவர்.