நா.சுப்பிரமணிய ஐயர். தெல்லிப்பளை: வேல் வெளியீட்டகம், வளப்புலம் ஒழுங்கை, குரும்பசிட்டி, 1வது பதிப்பு, ஏப்ரல் 1980. (கொழும்பு 12: சிலோன் நியூஸ்பேப்பர்ஸ் விமிட்டெட், 194 A, பண்டாரநாயக்க மாவத்தை).
16 பக்கம், விலை: ரூபா 3.00, அளவு: 18×11.5 சமீ.
வேல்அமுதனின் நூலுருவில் வெளிவந்த அறுவடை, வாழும் வழி ஆகிய நாடகங்களையும், வைகறை, மாரீசம் ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தமிழ் விரிவுரையாளர் வித்யா பூஷணம் நா.சுப்பிரமணியன் அவர்கள் இச்சிறுநூலில் திறனாய்வு செய்துள்ளார். வேல் அமுதலிங்கம், அமுதன் என்ற புனைபெயரில் இலக்கிய உலகில் அறிமுகமானவர். அமுதன் என்ற பெயரிலான இலங்கை அறிவு இயக்கம் என்ற நிலையத்தை 1970களில் நடத்திவந்தவர். கொழும்பில் ஆங்கில வர்த்தகக் கம்பெனியொன்றில் கணக்கு எழுதுவினைஞராகக் கடமையாற்றியவர்.