8747 புதிய கண்ணோட்டங்களும் புதிய அர்த்தங்களும்.

த.கலாமணி. யாழ்ப்பாணம்: ஜீவநதி, கலை அகம், அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஏப்ரல் 2013. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், நல்லூர்).

vi, 90 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ.

11 வருடங்களாக ஆசிரியராகப்பணியாற்றிய கலாநிதி த.கலாமணி, 25 ஆண்டுகாலம் பல்கலைக்கழக விரிவுரையாளராகவும் பணியாற்றியவர். அவ்வப்போது இவர் எழுதிய விமர்சனக் கட்டுரைகளில் தேர்ந்த 10 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. கே.டானியலின் கானல் ஓர் உளவியல் மீள்பார்வை, உளவியல் நோக்கில் தெணியானின் காத்திருப்பு, கே.டானியலின் கோவிந்தன் ஒரு பார்வை, ஜீவகாருண்யனின் தேடலும் விமர்சனங்களும்: சில குறிப்புகள், வாழ்வியல் அர்த்தம் தேடும் இலக்கிய மடல், தெணியானின் கானல் மான்: ஆளுமை உளவியல் வழியே ஒரு மீள்பார்வை, ஈழநாடு சிறுகதைகள்: தொகுதி 1-ஓர் அறிமுகக் குறிப்பு, கு.பா.ராவின் சிறிது வெளிச்சம் சிறுகதை தொடர்பான விமர்சனப் பார்வை, மருந்தெனல் நோய் இனி வராதிருக்க: அறிவியல் பிரசுரமொன்று பற்றிய சில குறிப்புகள், வாழும் தகவற் களஞ்சியம்: பத்தி எழுத்துத் தொகுப்பு நூலொன்றினூடான ஒரு தரிசனம் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

13765 வல்லமை தாராயோ: சிறுகதைகள்.

N.A. தீரன். (இயற்பெயர்: R.M.நௌஷாத்). கல்முனை: புகவம் வெளியீடு, இல. 1, பிரதான வீதி, சாய்ந்தமருது 01, 1வது பதிப்பு, மே 2000. (கல்முனை: அன் நூல் கிராப்பிக் ஓப்செட்). x, 74 பக்கம்,

14215 தெய்வீக பாடல்கள்.

பொன். வல்லிபுரம் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: மயூரபதி ஸ்ரீ பத்திரகாளியம்மன் தேவஸ்தானம், 1வது பதிப்பு, 1991. (கொழும்பு 10: இம்பீரியல் பிரஸ், 25, முதலாம் டிவிஷன், மருதானை). 114 பக்கம், விலை: ரூபா 50.00,