பிரமிள் (மொழிபெயர்ப்பு). சென்னை 600005: நற்றிணை பதிப்பகம், எண்: 123V, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி, 1வது பதிப்பு, டிசம்பர் 2011. (சென்னை 600 005: கணபதி புரோசஸ்).
96 பக்கம், விலை: இந்திய ரூபா 70., அளவு: 21.5×14 சமீ.
இந்நூல் பிரமிள் மொழிபெயர்த்த 22 கவிதைகளை உள்ளடக்கியது. வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ், மாக்ஸ் ஜேகப், சார்லஸ் போதலோ, ஸ்தேஃபான் மல்லார்மே, பாப்லொ நெருடா, பெர்டோல்ட் பிரெக்ட், கரொல் வத்ஜேலா, கலீல் கிப்ரான், லட்சுமி கண்ணன், எம்.கோவிந்தன், கேனொபநிஷத், சின்னாட், ஜோசப் பிராட்ஸ்கி, ஆலன் கின்ஸ்பெர்க், தியொடோர் ரெத்கீ, ஈ.ஈ.கம்மிங்ஸ், தெட் ஹ{ஸ், சார்லஸ் ரைட், டி.ஜே.என்ரைட், எஸ்ரா பவுண்ட், ஜே.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் கவிதைகளின் தமிழாக்கம் இவை. உலக இலக்கிய உச்சம் எனத்தக்க ஜே.கிருஷ்ணமூர்த்தியின் ‘பாதை’ கவிதை இத்தொகுப்பின் சிறப்பம்சம். பிரமிளுக்கு இயல்பாக அமைந்த கவித்துவத்தோடு அவரது ஆன்மீகத் தேடலும் வெளிப்படும் விதமாக கவிதைத் தேர்வுகள் அமைந்துள்ளன.