கெக்கிராவ ஸூலைஹா. கெக்கிராவ: ஸூலைஹா, 1வது பதிப்பு, 2009. (கல்ஹின்ன: விங்ஸ் கிராப்பிக்ஸ்).
126 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 150., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-51679-2-7.
கன்னடப்பெண்கவி மகாதேவிஅக்காவின் பட்டுப்பூச்சியின் பின்னுகை போலும் என்ற கவிதை, ஏ.கே.ராமானுஜனின் ஆங்கிலமொழி வழியாக ஸூலைஹாவினால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் பாலஸ்தீனக் கவிஞர்களான மஹ்மூத் தர்வேஷ், சமி அல் காஸிம், மொயின் பஸீனோ, கன்சுல் வஹாப் முதலானோரின் கவிதைகளும் இங்கு தமிழாக்கம்பெற்றுள்ளன. ஆங்கிலம் மூலமான இலங்கைக் கவிஞர்களின் போர்க்காலப்படைப்பக்களும் இடம்பெற்றிருக்கின்றன. ஆன் ரணசிங்க, ஜீன் அரசநாயகம், கமலா விஜேரத்ன போன்றோரின் ஆங்கிலக் கவிதைகள் ஸ{லைஹாவின் கைவண்ணத்தில் எளிய தமிழில் அறிமுகமாகின்றன. பஞ்சாபிப் பெண் கவி அம்ரிதா ப்ரீதம் எழுதிய பஞ்சாபி நெடுங் கவிதையொன்றை கிருஷ்ண கொரோராவும் குஷ்வந்சிங்கும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்க- அவற்றையும் தமிழாக்கி இருக்கிறார். மொத்தத்தில் எளிய நடையில் அமைந்த மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுதி.