மனோன்மணி சண்முகதாஸ். சென்னை 600 113: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், C.I.T. வளாகம், தரமணி, 1வது பதிப்பு, 2000. (சென்னை 600 004: United Bind Graphics, 101-D Royapettah High Road, Luz, Mylapore).
(6), 327 பக்கம், விலை: இந்திய ரூபா 75.00, அளவு: 22×14.5 சமீ.
மன்யோசு தொகுதி 10இல் அடங்கிய பாடல்களின் மொழிபெயர்ப்பு இதுவாகும். ஜப்பானின் தொடக்க கால இலக்கியம் மன்யோசு என்பதாகும். ஆயிரக்கணக்கான பாடல்களின் தொகை என்பதை ஜப்பானிய மொழியில் மன்யோசு எனக் குறிப்பிடுவர். மன்யோசு தொகை 12 பகுதிகளை உள்ளடக்கியது. கி.பி. 4 முதல் 7 வரையிலான காலகட்டங்களில் தொகுக்கப்பெற்ற மன்யோசு கவிதைகள் இயற்கை, காதல், பிரிவு, பருவ காலங்கள், வாழ்க்கை நுகர்ச்சிகள் முதலிய பொருண்மைகளைக் கொண்டமைந்தன. இத்தகைய சிறப்புமிக்க மன்யோசு தொகுப்பில் உள்ள காதல் பாடல்களை இந்நூல் தமிழ் மூலம் வழங்க முனைகின்றது. இந்நூல் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் 369ஆவது வெளியீடாகும்.