ரெனெஸ்ஸி வில்லியம்ஸ் (மூலம்), நிர்மலா நித்தியானந்தன், மல்லிகா ராஜரட்ணம், க.பாலேந்திரா (தமிழாக்கம்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
x, 100 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-401-0.
வுநnநௌளநந றுடைடயைஅள 1944இல் எழுதிய மூலநாடகம் வுhந புடயளள ஆநயெபநசநை என்ற கண்ணாடி வார்ப்புக்கள். இந்நாடகம் பாலேந்திரா குழுவினரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, யாழ்ப்பாணத்துப் பேச்சுவழக்கைக் கையாண்டு 09.06.1978இல் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் முதலில் மேடையேற்றம் கண்டது. அன்றுமுதல் இந்நாடகம் பிரசித்திபெற்று இன்றளவில் அதன் மொழிபெயர்ப்புக்காகவும், பாத்திர வார்ப்பக்காகவும் அரங்கியல் மாணவர்களால் உன்னிப்பாக அவதானிக்கப்படுகின்றது. இந்த நாடகத்தின் நூலுருவே இந்நூலாகும். எமக்குச் சொந்தமான பாத்திரங்கள், எமது வாழ்க்கை அனுபவங்கள் ஆகியவை நாடகத்திலும் பிரதிபலித்ததால் அமெரிக்க நாடகமானாலும் பரிச்சயமான அனுபவத்தை இந்நாடகம் தமிழ்ப் பார்வையாளருக்கு வழங்கியது.