8776 பெண் பாவை (நாடகம்).

ஹென்றிக் இப்சன் (ஆங்கில மூலம்), காசிநாதர் சிவபாலன் (தமிழாக்கம்). சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 ஜக்கரியா காலனி, 1வது தெரு, சூளைமேடு,  1வது பதிப்பு, மார்ச் 2013. (சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 சக்காரியா காலனி, 1வது தெரு, சூளைமேடு).

136 பக்கம், விலை: இந்திய ரூபா 150., அளவு: 21×13.5 சமீ., ISBN: 978-93-81322-15-4.

நோர்வேயின்  பிரபல நாடகாசிரியர் ஹென்றிக் இப்சன் (1828-1906) அவர்கள் 1879இல் இத்தாலியில் வாழும்போது எழுதிய பொம்மை வீடு (A Doll House) என்ற  நாடகத்தின் தமிழ் வடிவம் இது. ஆணாதிக்கச் சூழலில் நோரா என்ற பெண்ணை அவரது கணவன் ஒரு பாவையாக- பண்டமாகக் காண்பது கதையின் அடிநாதம். இந்நாடகத்தில் இப்சன் அன்றாடம்  தான் காணும் அசாதாரணமான மனிதர்கள் பற்றி பாரம்பரிய துன்பியல் முறையில் தலைப்புகளையும் கட்டமைப்பையும் பயன்படுத்தி இந்நாடகத்தை ஆக்கியிருக்கிறார்.  ஐரோப்பாவில் பெண்ணுரிமை இயக்கம் வேகம்பெறக் காரணமாக இந்நாடகம் அமைந்திருந்தது.  இலங்கையில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் 60களிலேயே  வேர்ணன் அபேசெகரா என்ற அரச அதிபரின் ஆதரவுடன் எழுத்தாளர்  தேவன்-யாழ்ப்பாணம், இதனை நாடகமாக்கியிருக்கிறார். அத்தகைய முக்கியத்துவம் பெற்ற ஒரு நாடகத்தின் மீள் அறிமுகம் இது. நோர்வேயில் சட்டத்தரணியாகத் தொழில்புரியும் கா.சிவபாலன் திருக்கோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.  அனைத்துலக உறவுகள் துறையில் முதுகலைமாணிப் பட்டத்தைப் பெற்றவர். இலங்கையில் சட்டவாளராகவும் (Attorney-at-Law), இங்கிலாந்தில் சொலிசிட்டராகவும், அவுஸ்திரேலியாவில் பாரிஸ்டராகவும் சட்டத்துறையில் உயர்ந்தவர்.

ஏனைய பதிவுகள்

15314 வாழ்க்கைத் துணை : பழமொழிகள் அறிவுரைகள்.

இளையதம்பி சிவயோகநாதன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு: இளையதம்பி சிவயோகநாதன், 1வது பதிப்பு, மே 2007. (அச்சக விபரம் தரப்படவில்லை). 95 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ. விஞ்ஞானப் பட்டதாரியான இந்நூலாசிரியர், அரச கூட்டுத்

Casino games

Blogs Awesome Dominance Money Slot: free Spin 100 Free Spins spins no deposit More Gameshow & Monopoly-Styled Online casino games Big style Gaming Casino slot