8781 அம்மாவின் ரகசியம்.

சுநேத்ரா ராஜகருணாநாயக்க (சிங்கள மூலம்), எம்.ரிஷான் ஷெரீப் (தமிழாக்கம்). தமிழ்நாடு: காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்கோவில் 629001, 1வது பதிப்பு, நவம்பர் 2011. (சென்னை 600005: மணி ஓப்செட்).

69 பக்கம், விலை: இந்திய ரூபா 55., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-80240-55-8.

ஒரு பெண்ணின் வாழ்க்கையின் இடுக்குகளில் பொதிந்து கிடக்கின்றன பல ரகசியங்கள். அவை பல சமயம் கல்லாகக் கனத்தபடி அங்கேயே கிடந்து மக்கிப் போகின்றன. அபூர்வமாகச் சில சமயம் அந்த ரகசியங்கள் பூப்போல மேலே மிதந்துவந்து இளைப்பாறலைத் தரும் வாய்ப்புக்களை வாழ்க்கை  அவ்வப்போது ஏற்படுத்துகின்றது.  சில சமயம் ரகசியங்கள் மூர்க்கத்தனமாக உடைபடும் அபாயங்களும் நேர்கின்றன.  சிலசமயம் அவற்றைப் பேசியே ஆகவேண்டிய நிர்ப்பந்தத்தைச் சிலர் எதிர்நோக்குகின்றார்கள்.அப்போது  நூலிழை பிரிவது போல் மெல்ல மெல்ல அவை பிரியலாம் அல்லது சலனமற்ற குளத்தில் எறிந்த கல்லைப்போல்  தொடர் அலைகளை ஏற்படுத்தலாம். அபூர்வமாக அவை அடுத்தவரின் மனதை இளக்கி உறவின் ஒரு மூடப்பட்ட சன்னலைத் திறக்கலாம். அம்மாவின் ரகசியம் குறுநாவலில ;வரும் முத்துலதாவுக்கும் ஒரு ரகசியம் இருக்கின்றது.  அது எப்படி உருவாகியது அந்த ரகசியத்தை அவள் எப்படித் தாங்கினாள். ஏன் எப்படி அதை வெளியிடத் தீர்மானித்தாள் போன்ற கேள்விகளின் ஊடே கதை தன் பாதையை அமைத்துக்கொள்கின்றது.

ஏனைய பதிவுகள்