கிரிஸ்டீன் வில்சன் (ஆங்கில மூலம்), இரா.சடகோபன் (தமிழாக்கம்). கொழும்பு 10: சூரியா வெளியீட்டகம், 109, வண.எஸ்.மஹிந்த மாவத்தை, 1வது பதிப்பு, 2010. (கொழும்பு 10: எஸ்.அன்ட் எஸ். பிரின்டர்ஸ், 49, ஜயந்த வீரசேகர மாவத்தை).
410 பக்கம், விலை: ரூபா 580., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-656-17-9.
Christine Wilson எழுதிய Bitter Berry என்ற ஆங்கில நாவலின்; தமிழாக்கம் இதுவாகும். கோப்பியின் ஆரம்பம், அதன் வளர்ச்சி, காசு காய்க்கின்ற மரமாக இதை நம்பி அதன் காலடியில் விழுந்துகிடந்த வெள்ளைக்காரர்கள், அதன் செழுமை தந்த செல்வச் செழிப்பால் இந்த நாடு கொண்ட வளர்ச்சி, பாதைகள், வங்கித் தொழில், காப்புறுதி, ஏற்றுமதி இறக்குமதிகளுக்கான துறைமுக அபிவிருத்திகள், கோப்பியின் அழிவு, தேயிலையின் ஆரம்பம் என்ற ஒரு வரலாற்றையே நிகழ்த்திக்காட்டுகிறது இந்தக் கசந்த கோப்பி. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 226953).