8799 படவரை கலையில் எறியங்கள்: பல்தேர்வு வினா-விடைகள்.

கே.ராஜன் (இயற்பெயர்: க.துரைராஜரட்ணம்). திருக்கோணமலை: கே.ராஜன், 59 வித்தியாலயம் வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2006. (திருக்கோணமலை: ரெயின்போ மினிலாப், 361, நீதிமன்ற வீதி).

132 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×14 சமீ.

க.பொ.த.உயர்தரத்தில் புவியியல் கற்கும் மாணவர்களின் தேவைகருதி எறியங்கள் என்னும் விடயம் பற்றிய இச்சிறுநூல் வினா-விடை முறையில் கடந்த கால பரீட்சை வினாக்களையும் உள்ளடக்கியதாக ஆக்கப்பட்டுள்ளது. திருக்கோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியின் ஆசிரியராகப் பணியாற்றும் இந்நூலாசிரியர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல்துறையில் 1990-94 காலகட்டத்தில் புவியியல் சிறப்பு பட்டப்படிப்பினை மேற்கொண்டவர். 2004/2005 காலகட்டத்தில் இதே பல்கலைக்கழகத்தில் குடித்தொகை அபிவிருத்திக் கல்வியில் பட்ட மேற்படிப்பு டிப்ளோமாவைப் பெற்றவர்.

ஏனைய பதிவுகள்

8588 ஒரே இனம்.

செ.கணேசலிங்கன். யாழ்ப்பாணம்: செ.கணேசலிங்கன், உரும்பிராய், 1வது பதிப்பு, மார்ச் 1960. (சென்னை 1: கேசரி பிரிண்டிங் வேர்க்ஸ்). xi, 135 பக்கம், விலை: இந்திய ரூபா 2.00, அளவு: 18×12.5 சமீ. இந்நூல் செ.கணேசலிங்கனின்