எஸ்.அன்ரனி நோர்பேட். கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G. 50, பீப்பள்ஸ் பார்க், 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 11: சேமமடு பதிப்பகம்).
vi, 105 பக்கம், விலை: ரூபா 300.00, அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-685-U004-8.
Physical Geography: Process and Landforms என்ற ஆங்கில உபதலைப்புடன் எழுதப்பெற்றுள்ள இந்நூல், உயர்தர மாணவர்களின் கல்வித் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்குடன் எழுதப்பட்டுள்ளது. ஆற்றின் அரித்தல் செயன்முறையும் நிலவுருவங்களும், காற்றரிப்புச் செயன்முறையும் நிலவுருவங்களும், பனிக்கட்டியாற்று நிலவுருவங்கள், கரையோர அரித்தல் செயன்முறையும் நிலவுருவங்களும், தரைநீரின் செயன்முறையும் நிலவுருவங்களும் ஆகிய ஐந்து அத்தியாயத் தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. சூசைப்பிள்ளை அன்ரனி நோர்பேட் (1953), கொழும்புப் பல்கலைக்கழகத்தின் புவியியல்துறைப் பேராசிரியராவார். பேராதனை, சென்னைப் பல்கலைக்கழகங்களில் பட்டங்களைப் பெற்ற இவர் சுவீடனிலுள்ள ஸ்ரொக்ஹோம் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பயிற்சிபெற்றவர்.