ஜோதி சூரியகுமார். தெகிவளை: ஜோதி பதிப்பகம், 122/1 காலி வீதி, 1வது பதிப்பு, மார்ச் 1973. (கொழும்பு 11: குணாளன் அச்சகம்).
(7), 216 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 3.25., அளவு: 17.5×12.5 சமீ.
தென்னிந்தியத் தமிழ்நாட்டில் உள்ள திருத்தலங்களுக்கும் முக்கியமான நகரங்களுக்கும் சென்று விரிவான தகவல்களுடன் பிரயாணக் கட்டுரை நூலை வெளியிட்டுள்ளார் திருமதி ஜோதி சூரியகுமார். கொழும்பில் மித்திரன் தினசரியில் இத்தொடர் கட்டுரை வெளியானபோது மிகுந்த ஆர்வத்துடன் வாசிக்கப்பட்டது. தென்னிந்திய யாத்திரை மேற்கொள்ளும் ஈழத்தவர்களுக்கு நல்லதொரு கைநூலாக இது அமைகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 118814).