8807 நிலாவின் இந்திய உலா.

நிலா (இயற்பெயர்: உதயகுமாரி பரமலிங்கம்).  சென்னை 600051: முகில் பதிப்பகம், 11, சூர்யா தோட்டம், குமரன் தெரு, குதிரை குத்தி தாழை, மாதவரம் பால் பண்ணை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2010. (சென்னை 600024: வடலி பதிப்பகம், 54/13, 10வது தெரு, டிரஸ்ட் புரம், கோடம்பாக்கம்). 

(8), 256 பக்கம், புகைப்படங்கள், வண்ணத்தகடுகள், விலை: இந்திய ரூபா 180., அளவு: 21×13.5 சமீ.

சக்கர நாற்காலியுடன் வாழும் தனது இயலாமையை ஒதுங்குதலாகக் கொண்டுவிடாமல் சவாலாகக் கருதி வாழும்  துணிச்சலும் விடாமுயற்சியும் மிக்க ஈழப் பெண்ணான நிலா தற்போது லண்டனில் தனத பெற்றோருடன் வசித்து வருகிறார். அவரது இந்தியப் பயண அனுபவங்களே இந்நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. பொதுவாக, பயணக் கட்டுரைகள் சுவாரஸ்யம் மிக்க வழிப்போக்கர்களின் அனுபவத்தைப் பறைசாற்றி நிற்பதென்பதே. ஆனால் இப்படைப்பு முழுவதும் நிலா எதிர்கொள்ளும் உபாதையும் வலிகளும், அவர் அதை எதிர்கொண்ட விதமும், அந்தப் போராட்டத்திற்கு உறுதுணையாய் நிற்கும் உறவினதும் நட்பினதும் பெருமையும் தவிர இந்திய தேசத்தின்- குறிப்பாக தமிழ்நாட்டின் சீர்கேடுகள் குறித்த ஒரு பயணியின் சாடல்களுமே நிலாவின் இந்திய உலாவாகின்றது. 2010ம் ஆண்டுக்கான தமிழியல் விருதினை இந்நூல் வென்றெடுத்தது.

ஏனைய பதிவுகள்