8808 பனி மலை தாண்டிய பாதச் சுவடு.

வேலணையூர் பொன்னண்ணா. டென்மார்க்: அறிவகம், Fyrreaenget-311, 7190 Billund, Denmark, 1வது பதிப்பு, 2012. (சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 சக்காரியா காலனி, 1வது தெரு, சூளைமேடு).

304 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவிலலை, அளவு: 22×15 சமீ.

புகலிடத்தின் ஈழத்தமிழரின்  எதிர்காலச் சந்ததியினர் தமது மூதாதையர் பற்றி, அவர்கள் கைவிட்டுவந்த வாழ்க்கைமுறைபற்றி, அந்தச் சமூகத்தினரின் சமய, சமூக, கலாச்சார வாழ்வு பற்றி, பண்பாடு பற்றி நாம் கொண்டிருக்கும் எண்ணங்களையும் வடிவங்களையும் நாம் புலம்பெயர்ந்து வந்து பதியம்வைத்துள்ள மண்ணில் வாழப்போகும் எமது அடுத்த தலைமுறையினருக்கு காலம் காலமாக எடுத்துச்சொல்லவேண்டிய கடமை எமக்குள்ளது என்பதை இந்தச் சுயவரலாற்று நூல் காட்டுகின்றது. விரிவான முன்னுரையை டென்மார்க் கி.செ.துரையும், அணிந்துரையை நூலகவியலாளர் என்.செல்வராஜாவும், அறிமுக உரையை- வேலணையூர் பொன்னண்ணாவும் வழங்கியுள்ளனர். டென்மார்க் எழுத்தாளர் வி.ஜீவகுமாரன், விஷ வைத்திய நிபுணர் கலாநிதி சு.சிற்றம்பலம், இளைப்பாறிய அதிபர் நா.க.சிவராமலிங்கம், தினக்குரல் பத்திரிகையின் நிறுவநர் எஸ்.பி.சாமி,  சமூகப்பணியாளர் வேலணை வீரசிங்கம், கலைஞர் வண்ணை தெய்வம், மதுரை கவிஞர் சங்கத் தலைவர் இரா.இரவி, எழுத்தாளர் வல்லிக்கண்ணன், வெரித்தாஸ் வானொலி- ஜெகத் கஸ்பார், உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தலைவர் டாக்டர் வாசவன், ஆசிரியர் ச.குமரேசையா என்று தொடரும் 32 பிரமகர்களின் வாழ்த்துரைகள் 304 பக்க நூலில் 108 பக்கங்களை  ஆக்கிரமிக்கின்றன. நூலின் இரண்டாவது பகுதி- வாழ்க்கை வரலாறு. 108-204 பக்கம் வரை இது விபரிக்கப்படுகின்றது. பிறப்பு இளமைக்காலம், ஆரம்பப் பள்ளி வாழ்க்கை, இனமைக்கால நினைவுகள், அரசியல் பொதுப்பணிப் பிரவேசம், என்று தொடர்கிறது. பொது வாழ்க்கையில் இவர் வேலணையில்  துணைவியாருடன் அவரது தாலிக்கொடியை விற்று பொது வீதியை செப்பனிட்ட செய்தி வருகின்றது. 1981இல் இவர் குடும்பத்துடன் புலம்பெயர்ந்த கதை தொடர்கின்றது. 1981 முதல் பிரான்ஸ் வாழ்க்கை, பின்னர் 1987முதல்  டென்மார்க் வாழ்க்கை என்று இவரது சுய வாழ்க்கை அனுபவம் நிச்சயம் ஐரோப்பிய நிரந்தரப் பிரஜைகளான எதிர்காலச் சந்ததியினருக்கு நிரந்தரமாக நிலைத்திருக்கும் ஒரு சுவையான கதையாக அமையும். பக்கங்கள் 225-304 வரை பொன்னண்ணாவின் மனித மேம்பாடு மற்றும் தன்முனைப்புக் கருத்துகள் பொதிந்த படைப்புக்களில் சில மாதிரிக்குத் தரப்பட்டுள்ளன. அவர் அடுத்த தலைமுறையினருக்கு விட்டுச்செல்லும் முதுமொழிகளாக இதைக் கருதலாம்.

ஏனைய பதிவுகள்

Mr Bet Kasino Prämie In 2024

Content Other Bonus Offers and Promos Verschiedene Arten Bei Spielautomaten Inside Mrbet Mr Bet Restricted Countries Mr Bet Spielsaal Payment Methods Cheltenham Festival Live Streaming