கே.ஜி.மகாதேவா. சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 சக்காரியா காலனி, 1வது தெரு, சூளைமேடு, 1வது பதிப்பு, ஜனவரி 2013. (சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 சக்காரியா காலனி, 1வது தெரு, சூளைமேடு).
168 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 90., அளவு: 21×13.5 சமீ., ISBN: 978-93-81322-10-9.
இந்நூலில் ஆசிரியர் எழுதிய கட்டுரைகளும், அவர் கண்ட நேர்காணல்களும் இடம்பெற்றுள்ளன. மனித தெய்வம் சாயிபாபா, செம்மொழி மகாநாடு, பேராசிரியர் கா.சிவத்தம்பி, அயோத்தி விவகாரம், தஞ்சைப் பெரிய கோவில், இந்திய நாவலாசிரியர் கு.சின்னப்ப பாரதி, அமெரிக்க அதிபர் ஒபாமா, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம், மலேசிய எழுத்தாளர் சை.பீர்முகம்மது, ரா.மு.நாகலிங்கம், மொழி விழிப்புணர்வற்ற தமிழகம், இந்திய நாடாளுமன்றத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினை, ஈழத் தமிழருக்கான டில்லி அழுத்தங்கள், ஓவியர் இலங்கைநாதன், முன்னாள் பூ வியாபாரி அன்னா ஹசாரே, எஸ்.பொன்னுத்துரை, பாலம் கல்யாணசுந்தரம், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வரலாற்றுப் பதிவுகள், மூவரின் (பேரறிவாளன், முருகன், சாந்தன்) தூக்குக்கு எதிராகத் திரண்ட தமிழகம் , நூல்தேட்டம் செல்வராஜா ஆகிய பொருட்பரப்பில் இவர் எழுதிய கட்டுரைகளும், சம்பந்தப்பட்டவர்களுடன் மேற்கொண்ட நேர்காணல்களின் வழியாக உள்வாங்கப்பெற்ற கருத்துக்களின் கட்டுரை வடிவமும் இந்நூலில் 20 தலைப்புகளில் சுவையாகத் தரப்பட்டுள்ளது. இலங்கையில் கண்டி-செய்தி, யாழ்ப்பாணம்-ஈழநாடு ஆகிய பத்திரிகைகளில் ஊடகவியலாளராக இருந்த நூலாசிரியர், பின்னாளில் தமிழ்நாட்டுக்குப் புலம்பெயர்ந்துசென்று அங்கும் தன் ஊடகவியல் பணிகளை மேற்கொண்டு வருபவர். தமிழகத்தில் இவரது பலநூல்கள் வெற்றிகரமாக வெளிவந்துள்ளன.