எம்.சற்குணம் (பதிப்பாசிரியர்). மட்டக்களப்பு: அடிகளார் சிலை நிறுவனக் குழு, காரைதீவு (கி.மா.), 1வது பதிப்பு, 1969. (கொழும்பு 12: சுதந்திரன் அச்சகம், 194V, பண்டாரநாயக்க வீதி).
305 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18.5 சமீ.
கலாநிதி மா.பரசுராமன் அவர்களைத் தலைவராகவும், எம்.சற்குணம் அவர்களை மலராசிரியராகவும், க.ஆறுமுகம், சே.பொன்னம்பலம், இரா.கிருஷ்ணபிள்ளை, சி.அருள்சிவம், இ.வேல்நாயகம், பூ.சுந்தரம்பிள்ளை ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட மலர்க்குழுவின் செயற்பாட்டில் வரலாற்று முக்கியத்துவமான இம்மலர் உருவாகியுள்ளது. சுவாமி விபுலானந்தர் பற்றிய பல்வேறு தமிழறிஞர்களின் கருத்துக்கள் கட்டுரை வடிவிலும் கவிதை வடிவிலும் 65 படைப்புக்களாக இம்மலரில் இடம்பெற்றுள்ளன.