8816  என் நெஞ்சில் இடங்கொண்ட ஒரு பெரியார்.

மு.வைரமுத்து. யாழ்ப்பாணம்: மு.வைரமுத்து, குமரபுரம், லோட்டன் வீதி, மானிப்பாய், 1வது பதிப்பு ஜுன் 1980. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சண்முகநாத அச்சகம்).

xi, 111 பக்கம், தகடுகள், விலை: ரூபா 00., அளவு: 21.5×14 சமீ.

என் நெஞ்சில் இடங்கொண்ட ஒரு பெரியார்.

மு.வைரமுத்து. யாழ்ப்பாணம்: சிவதொண்டன் சபை, 2வது பதிப்பு, 1989, 1வது பதிப்பு, 1980. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சண்முகநாத அச்சகம்).

xvi, 111 பக்கம், தகடுகள், விலை: ரூபா 20., அளவு: 21.5×14 சமீ.

காவி உடுத்திடாமல் கமண்டலம் எடுத்திடாமல் துறவுபூண்ட முனிபுங்கவர் யோக சுவாமிகள் வாழ்வையும் வாக்கையும் பற்றிய ஒரு சில குறிப்புகளே இந்நூல். 1974இல் எழுதப்பெற்ற இக்கட்டுரைகள் 1980இல் நூலுருவாகும் வாய்ப்புப் பெற்றிருந்தது. வைத்தீஸ்வரன் கோவிற் சந்தி, வெள்ளவத்தைக் கடற்கரை, அற்புதமான முதற் தரிசனம், சோதனையுஞ் சாதனையும், இல்லத்தில் அமைந்த வழிபாட்டறை, பிரபஞ்சம் இறைவன் மார்பில் ஒரு தங்கப் பதக்கம், சீர்திருத்தவாதியும் சவர்க்காரக் கட்டியும், எட்டிலும் எண்பதிலும், விடுவானேன் பிடிப்பானேன், மதியால் முடியாது, வேண்டுதல் வேண்டாமை இலாதார்க்குத் தட்டுப்பாடேது? துறவிக்கு உயர்வேது தாழ்வேது, கருணைக் களஞ்சியம், துறவிக்கு வேந்தனும் துரம்பு, தாயினும் நல்ல தலைவன், நூதனம் ஒன்றுமில்லை, குருபக்தி, யாத்திரை முடிந்த இடம், தவமும் தவமுடையார்க்கு, என் பிரார்த்தனை ஆகிய தலைப்புகளில் அமைந்த இருபது கட்டுரைகள் இந்நூலில் யோகசுவாமிகளின் வாழ்க்கையையும் பணிகளையும் பதிவுசெய்கின்றன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  87091).

ஏனைய பதிவுகள்

13926 ஒளிவளர் தீபங்கள்: வலி.கிழக்குப் பிரதேசத்தின் மறைந்த இலக்கிய உறவுகளின் வாழ்க்கைக் குறிப்புகள்.

யோகேஸ்வரி சிவப்பிரகாசம். அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, ஆடி 2016. (நெல்லியடி: பரணீ அச்சகம்). vi, 103  பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5