8827 வாழ்வை நெறிப்படுத்தும் சுவாமி கெங்காதரானந்தா.

தா.சியாமளாதேவி. சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2004. (சென்னை 600014: B.V.R. ஆப்செட்).

(12), 188 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 50., அளவு: 18×12 சமீ.

திருக்கோணமலையின் பிரதான வீதியில் அமைந்துள்ள சிவயோக சமாஜத்தின் ஸ்தாபகர் ஸ்ரீமத் சுவாமி கெங்காதரானந்தாஜி அவர்கள் பற்றிய நூல் இதுவாகும். இளமை முதலே சுவாமிஜியின் பக்தையாக விளங்கிய நூலாசிரியை, தனது கைப்படவே குருவின் வாய்மொழிகளை அவ்வப்போது எழுதித் தொகுத்து வந்தவர். இவை காலத்துக்குக் காலம் சமாஜ வெளியீடுகளாய் வெளியிடப்பட்டுள்ளன. அவ்வகையில் குருமுகம், ஞானச்சுடர், அமிர்தவர்ஷம், அமிர்தத் துளிகள், சித்த சோதனை ஆகியவை ஏற்கெனவே நூருலுருவானவை.  சியாமளாதேவி அண்மையில் 28 இயல்களில் எழுதியுள்ள இந்நூல் அருட்குருநாதரின் சமாதியின் பின்னர் அவரது வாழ்க்கை வரலாறாக வெளிவந்துள்ளது. தவஞானிகளின் மகிமை/ பிறந்த மண்ணும் குடும்பச் சிறப்பும்/ சித்தர் தந்த திருவாக்கு/ மனம் கவர்ந்த மதயானைகள்/பெற்ற கல்வியும் கலைகளும்/ இடையில் சில வார்த்தைகள்/ சித்தர் மாமுகியின் சந்திப்பு/குரு-சீட சந்திப்பு/ புனித திரிவேணி தீர்த்தம்/ ஈழத்தில் திருமலரடிகள்/ ஞானக்களமாக விளங்கிய திருக்கோணேஸ்வரம்/ தொடர்ந்த பணிகள்/ பாலயோகியை இனங்காட்டிய யோகர்/ தில்லை நடராஜனுக்குத் திருக்கோயில்/ சிவராத்திரி ஆத்ம ரகசியம்/ நடைபாதையில் வழிகாட்டும் சற்குரு/ வயலில் இயற்றிய உலகியல் தவம்/ விழிநீர் சிந்தவைத்த பக்தன்/தொடர்ந்த ஆச்சிரமப் பணிகள்/ விலங்குகள் வந்தணைந்தமை/கொம்மாதுறையில் அருள்வித்து/ விபூதி மகிமை/ கதிர்காம ஷேத்திராடனம்/ ரோக ரகசியம்/ வலுக்குன்றிய தூலசரீரம்/குருதேவரின் மகாசமாதி/ அஸ்தி சமாதிலிங்கப் பிரதிஷ்டை/சற்குருவின் வழிநிற்போம் ஆகிய 28 தலைப்புகளில் இவ்வரலாறு எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Lobstermania 3 Online

Content Bonuses And you can Free Spins To own To try out A real income Harbors Lobstermania Slots From the Their Best And therefore Business