டீ.ரி.செல்வநாயகம். சென்னை 1: திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1/140, பிராட்வே, திருநெல்வெலி, 1வது பதிப்பு, நவம்பர் 1953. (சென்னை 1: அப்பர் அச்சகம், 2/140 பிராட்வே).
192 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×13 சமீ.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கழுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த நூலாசிரியர் டி.ரி.செல்வநாயகம், சுவாமி விபுலாநந்தருடன் நேரடித் தொடர்பிலிருந்தவர். சுவாமியின் மறைவின் பின்னர் இடம்பெற்ற மூன்றாண்டு பூர்த்தி நினைவுதினத்தையொட்டி 1950இல் ஆவணி 8ம் நாளில் இலங்கை வானொலியில் விபுலாநந்தர் பற்றி ஆற்றிய உரையின் விரிவான எழுத்து வடிவம் இதுவாகும். பிறப்பு, வளர்ப்பு, ஆசிரியப்பணி, துறவுநிலை, பொதுநலப்பணிகள், கூட்டத் தொண்டுகள், தமிழ் ஊழியம், யாழ். நூல் அரங்கேற்றம், மறைவு, இரங்கற் பாக்கள் ஆகிய பத்துத் தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. ஆங்காங்கே அடிகளார் எழுதிய கட்டுரைகளின் பகுதிகளும், அடிகளாரின் தொண்டுகளைப் பாராட்டி வரையப்பட்ட கடிதங்கள் , கட்டுரைகள்ஆகியவற்றின் பகுதிகளும், அவரது மறைவின்போது பாடப்பெற்ற இரங்கற் பாக்களிற் சிலவும் இந்நூலில் காணப்படுகின்றன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 155628).