ஜெயச்சந்திரன் ஜென்னி (தொகுப்பாசிரியர்). பாரிஸ்: ஜெயச்சந்திரன் ஜென்னி, 1வது பதிப்பு, ஐப்பசி 2012. (லண்டன்: ஜே.ஆர்.பிரின்ட்).
116 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×20 சமீ.
திருமதி பிலோமினா லோறன்ஸ் எனும் உடைக்கமுடியாத விம்பத்திலிருந்து உயிர்த்தெழும் நினைவுகள் என்ற சிறப்புத் தலைப்புடன் வெளியாகியுள்ள இம்மலர் அமரர் திருமதி பிலோமினா லோறன்ஸ் (01.06.1939-17.07-2012) அவர்களின் நினைவுப் பதிவுகளை உள்ளடக்கியுள்ளது. இலங்கைத் தமிழரசுக்கட்சித் தொண்டராக விளங்கியவரும், தன் வாழ்வின் பெரும்பகுதியை அரசியல் மேடைகளுக்கும் இறைத்தொண்டுக்கும் அர்ப்பணித்து வாழ்ந்து தாயகத்தில் மறைந்தவரான பிலோமினாவின் அரசியல் வாழ்வின் நினைவுகளை மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம், இரா.சம்பந்தன், வீ.ஆனந்தசங்கரி, ஞா.ஞானசேகரன், த.சித்தார்த்தன், தி.சிறிதரன், செ.சந்திரகாசன், இரா.துரைரத்தினம், வீர சுப்பிரமணியம், சி.தண்டாயுதபாணி, ஐ.தி.சம்பந்தன், சே.சிறீஸ்கந்தராஜா, ச.செல்வராசா, கண்மணி இரத்தினவடிவேல், பொன்.சத்தியசீலன், ஆ.ரகுபதி பாலசிறீதரன், அ.வரதராஜப்பெருமாள், கி.பி.அரவிந்தன், அன்னலிங்கம் ஐயா, வேதநாயகம் ஜோசப்பின், தங்க மகேந்திரன், சி.புஷ்பராணி, செ.ரவீந்திரன், நீ.கந்தசாமி, திலகவதி பரராஜசிங்கம், ஆ.ஜதீந்திரா, ச.வி.கிருபாகரன், வீ.ராம்ராஜ், வி.சிவலிங்கம் ஆகியோர் பதிவுசெய்துள்ளனர். காந்தீய வாழ்வின் நினைவுகளை ச.அ. டேவிட் ஐயா, பொ.காந்தி ஐயா, த.கிருபாகரன், செ.விபுனசேகரம் ஆகியோரும், ஆன்மீக வாழ்வின் நினைவுகளை வண.கிங்ஸ்லி சுவாம்பிள்ளை, ஜோர்ஜ் திசாநாயக்கா, வின்சன் டி போல் சபை அங்கத்தினர் ஆகியோரும் பதிவுசெய்துள்ளனர். உறவுப்பாலம் அமைத்த நட்புக்களினதும், ரத்த உறவுகளினதும் நினைவுகளும் இம்மலரில் தொடர்கின்றன. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆராம்பகால- இடைக்கால மனப்பதிவுகளை இந்நூலில் திருமதி பிலோமினாவின் பின்புலத்தில் மீள்தரிசனம் செய்யமுடிகின்றது.