ஆலங்கீர் ஜவஹர். திருக்கோணமலை: மூதூர் முற்போக்கு வாலிபர் மன்றம், மூதூர், 1வது பதிப்பு, மார்ச் 1972. (கொழும்பு 13: ரெயின்போ பிரின்டர்ஸ், 231 Wolfendhal Street).
36 பக்கம், தகடுகள், விலை:ரூபா 1.25, அளவு: 18×12.5 சமீ.
மூதூர் பிரதேசத்தின் முதலாவது பாராளுமன்ற உறுப்பினரும் தகவல்-ஒலிபரப்புத்துறை பிரதி அமைச்சருமான ஏ.எல்.அப்துல் மஜீத் (15.11.1933- 13.11.1987)அவர்களின் சுருக்கமான வாழ்க்கை வரலாறு. திருக்கோணமலை மாவட்டத்தில் மூதூரில் பிறந்த மஜீத் பெரிய கிண்ணியா ஆண்கள் வித்தியாலயம், மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயம், திருக்கோணமலை இந்துக் கல்லூரி ஆகியவற்றில் ஆரம்ப இடைநிலைக் கல்வியைப்பெற்றவர். திருச்சி ஜமால் கல்லூரி, பூனே வாதியா கல்லூரி, சென்னை மாநிலக் கல்லூரி ஆகியவற்றில் உயர்கல்வியையும் பட்டப்படிப்பையும் மேற்கொண்டவர். திருக்கோணமலை மாவட்டத்தின் முதலாவது முஸ்லிம் பட்டதாரியாக நாடு திரும்பிய இவர் அரசியலில் ஈடுபாடு கொண்டு மார்ச் 1960இல் சுயேட்சை வேட்பாளராக நின்று தோல்வி கண்டார். பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து, அதே ஆண்டு ஜுலையில் நடந்த இடைத்தேர்தலில் வென்று மூதூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரானார் . 1977 வரை அவர் பாராளுமன்றத்தில் மூதூர் தொகுதி பிரதிநிதியாக இருந்தார். அரசியல் காரணங்களுக்காக 1987 நவம்பர் 17இல் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் அரசியலில் உச்ச நிலையில் இருந்தவேளையில் இந்நூல் வெளிவந்தது.