8842 மறைந்தும் மறையாத மாமனிதர் கலாநிதி ஏ.சீ.எஸ்.ஹமீத்: மர்ஹூம்  ஏ.சீ.எஸ்.ஹமீத் நினைவு மலர்.

ஏ.ஸீ.அப்துல் கபூர் (தொகுப்பாசிரியர்). அக்குறணை: நினைவு மலர்க்குழு, 108/109 கண்ட்ரி கோர்ட்ஸ், குருகொடை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2010. (உடத்தலவின்னை: சீ.வீ.பப்ளிஷர்ஸ், சிந்தனை வட்டம் அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).

xxxvi, 204 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29.5×21.5 சமீ., ISBN: 978-955-1779-47-4.

டாக்டர்  ஏ.ஸீ.எஸ்.ஹமீத் (10.4.1928-03.09.1999) அவர்கள் 1960ம் ஆண்டு முதன்முறையாக மலையகத்தின் அக்குறணை ஹரிஸ்பத்துவ பிரதேசத்தினூடாக கண்டி மாவட்டத்தில் தனது அரசியலை ஆரம்பித்து இலங்கைப் பாராளுமன்றத்தின் உறுப்பினராகியவர். தொடர்ந்து ஏழு முறைகள் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகி 36 வருடங்கள் தொடர்ச்சியாக இலங்கைப் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தவர். சந்தர்ப்பத்திற்கும் காலத்திற்கும் ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொண்டு அரசியலில் ஈடுபட்டவர். 1977ம் ஆண்டிலும் 1989ம் ஆண்டிலும் இருமுறைகள் இலங்கையின் வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்று 12 ஆண்டு காலம் பணியாற்றியவர். அவரது மறைவின் பத்தாண்டு நினைவாக இம்மலர் வெளியிடப்பட்டுள்ளது. ஏ.ஸீ.எஸ். ஹமீதின் வாழ்வும் பணிகளும், அவரது சில படைப்புக்களும் உரைகளும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

10860 புவியியல் 1ம் பாகம்.

ஜீ.ஜீ.ஆர். தம்பையாபிள்ளை, எம்.பீ. பெரேரா, ஜே.எம்.குணதாச (மூல ஆசிரியர்கள்), வே.வல்லிபுரம், அ.யோ.பெனடிக்ற் (தமிழாக்கம்). கொழும்பு: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 1வது பதிப்பு, 1976. (கொழும்பு: திசர அச்சகம்). vii, 210 பக்கம், வரைபடங்கள், விலை: