8848 பூபாளம்: கி.பூபாலன் மணிவிழா மலர்.

கொற்றை பி.கிருஷ்ணானந்தன் (தொகுப்பாசிரியர்). வல்வெட்டித்துறை: கண்ணன் பதிப்பகம், பிள்ளை நிலை, கொற்றாவத்தை, 1வது பதிப்பு, ஜுன் 2010. (வல்வெட்டித்துறை: ஐங்கரன் கிராப்பிக்ஸ், கொற்றாவத்தை).

(8), 104 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17.5×12 சமீ.

இந்நூல் கி.பூபாலன் அவர்களுக்காக மலர்ந்த மணிவிழா மலர். வடமராட்சியில்12.03.1950 அன்று பிறந்த கிருஷ்ணபிள்ளை பூபாளன், கூட்டுறவுத்துறையில் பலகாலம் சேவையாற்றியவர். மூன்று பிரிவுகளில் அமைந்த இந்நூல், முதலாம்பிரிவில் பிரபலங்களின் வாழ்த்துச் செய்திகளையும், இரண்டாம் பிரிவில் வாழ்த்துப் பாடல்களையும், அறிமுகத்தகவல்களையும் கொண்டுள்ளது. மூன்றாம் பிரிவில் மாணவர்களுக்கேற்ற அறிவியல் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இவற்றை கலாநிதிகள் த.கலாமணி (அறநெறி வழிகாட்டல்), செ.யோகராசா (வடமராட்சிப் பிரதேச புலம்பெயர் படைப்பாளிகள்), மற்றும் பா.தனபாலன் (பாடசாலை மாணவருக்குத் தேவையான விழுமிய முகாமையும் வழிகாட்டலும்), ஞானசக்தி கணேசநாதன் (மாணவர் உளநலம் பேணலில் அழகியல்), சமரபாகு சி.உதயகுமார் (பகிர்வு), சியாமினி இராசரட்ணம் (கலாசாரமும் கைத்தொலைபேசியும்) ஆகியோர் எழுதியுள்ளனர்.

ஏனைய பதிவுகள்