8857 எம்மை வாழவைத்தவர்கள்.

பொ.கனகசபாபதி. கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 11: சேமமடு பதிப்பகம்).

xxxvi, 504 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 1600., அளவு: 23×15.5 சமீ., ISBN: 978-955-685-009-3.

தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அதிபராகவிருந்து இளைப்பாறித் தற்போது கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் திரு. பொன்னையா கனகசபாபதி, தனக்குத் தெரிந்த, கேள்வியுற்ற, ஆனால் தான் அதிபராவதற்கு முன்பிருந்த, தனது முன்னோடிகளாகக் கருத்தில் இருத்திக்கொண்ட 23 பாடசாலை அதிபர்களைப் பற்றி மிக நுட்பமான அவதானிப்புகளுடன் இந்த நூலை எழுதியிருக்கிறார். இந்நூல் விபரிக்கும் அதிபர்களின் காலகட்டம் முடிவடைந்து  ஆகக்குறைந்தது நாற்பதாண்டுகளுக்குப் பிறகும் இவர்கள் பற்றிப் பேசவைத்திருப்பது- அவர்கள் நமது ஈழத்துக் கல்விப்பாரம்பரியத்துக்கு வழங்கிய அரும்பணிகளேயாகும். அவ்வகையில் அருட்தந்தை லோங் அடிகளார், ஹண்டி எஸ்.பேரின்பநாயகம், சங்.ஜோன் பிக்னெல், வி.வீரசிங்கம், ஒரெற்றர் சி.சுப்பிரமணியம், ரீ.ரீ.ஜெயரத்தினம், எஸ்.வி.ஓ.சோமநாதர், சங்.ஜே.ரி.அருளானந்தம், சீ.வீ.ஈ.நவரத்தினசிங்கம், வீ.தம்பு, எம்.ரீ.சீனித்தம்பி, சீ.குமாரசாமி, செல்வி ஈ.எம்.தில்லையம்பலம், ஏ.ஈ.தம்பர், திருமதி எஸ்.பிள்ளை, எஸ்.அம்பிகைபாகன், சீ.கே.கந்தசாமி, என்.சபாரத்தினம், கே.பூரணம்பிள்ளை, ஐ.பீ.துரைரத்தினம், விபுலாநந்த அடிகள், வீ.வீரசிங்கம், சைவப்பெரியார் சிவபாதசுந்தரனார் ஆகிய 23 கல்வித்துறை ஆழுமைகள் பற்றிய விரிவான தகவல்களை இந்நூல் பதிவுசெய்கின்றது.

ஏனைய பதிவுகள்