கா.சிவத்தம்பி (மூலம்), க.குமரன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
36 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-371-6.
இலங்கைத் தமிழ்ச் சுடர்மணிகள் வரிசையில் 16ஆவது நூலாக வெளிவந்திருக்கும் இந்நூல், பேராசிரியர் கந்தசாமிப்பிள்ளை கணபதிப்பிள்ளை (1903-1963) அவர்களின் வாழ்வும் பணிகளும் பற்றிக் கூறுகின்றது. கல்விப் பின்புலமும் சேவைக்காலமும், ஆய்வுப் பங்களிப்பு, இலக்கியப்படைப்புகள், நாடகம், ஆளுமையும் கருத்து நிலையும், முடிப்புரை ஆகிய ஆறு தலைப்புகளின்கீழ் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பின்னிணைப்புகளாக பேராசிரியர் கணபதிப்பிள்ளை வாழ்வில் முக்கிய திகதிகள், பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் எழுத்துக்கள் என்பன தரப்பட்டுள்ளன.