ப.சிவானந்த சர்மா (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: பண்டிதர் சிவத்திரு ச.சுப்பிரமணியம் நினைவுக்குழு, ஆவரங்கால், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2005. (இணுவில்: ஸ்ரீவித்யா கணினி அச்சகம்).
88 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.
இம்மலரில் வழமையான அம்சங்களான அமரரின் நிழற்படங்கள், அவரது வாழ்க்கை வரலாறு, தோத்திரத் திரட்டு, அஞ்சலியுரைகள், உறவினர்களின் உணர்வலைகள் என்ற அம்சங்களோடு பண்டிதர் அவர்களின் குணநலச் சிறப்பு, வாழ்க்கைத் திறம், ஆளுமை, ஆற்றல்கள், அர்ப்பணிப்பு, சமூகத்திற்கான அவரது அளிக்கைகள், அவர் நமக்கு விட்டுச்செல்லும் எச்சங்கள் ஆகியவற்றையும் கோடிகாட்டி நல்ல ஒரு வரலாற்றுப் பதிவாக எதிர்கால சந்ததியினர் அவர்பற்றித் தெரிந்துகொள்ள உதவும் வகையில் அமைந்த பல தகவல்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.