மலர்க் குழு. யாழ்ப்பாணம்: யாழ் மாவட்ட கலை கலாச்சாரப் பேரவை, மாவட்டச் செயலகம், 1வது பதிப்பு, ஆனி 2009. (யாழ்ப்பாணம்: எஸ்.எஸ்.ஆர். அச்சகம், திருநெல்வேலி).
xix, 286 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 1000., அளவு: 28.5×20.5 சமீ.
இந்நூல் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த கலைஞர்களின் விபரங்களைத் தொகுத்து வழங்குகின்றது. இலக்கியம், இசை (சங்கீதம், வில்லிசை, நாதஸ்வரம், தவில், மிருதங்கம், ஆர்மோனியம், வயலின், ஏனைய இசைக் கருவிகள்), நாடகம் (நாடகம், நாட்டுக்கூத்து), நடனம், கட்புலக் கலை அல்லது காண்பியக் கலை (சிற்பம், ஓவியம்), கைவினைக் கலை (ஒப்பனை), தொழில்நுட்பக் கலைகள் (கட்டிடக்கலை, சினிமா), ஏனைய கலைகள் (கிராமியக் கலை, சோதிடம், வாணவேடிக்கை) ஆகிய எட்டு பிரதான பிரிவுகளின் கீழ் கலைஞர்களின் பெயர் அகர வரிசை ஒழுங்கில் விபரங்கள் தரப்பட்டுள்ளன. மறைந்த கலைஞர்களை நட்சத்திரக் குறியீட்டின் மூலம் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 205740).