வி.சிவசாமி. யாழ்ப்பாணம்: சம்ஸ்கிருதத் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, மார்ச் 1986. (யாழ்ப்பாணம்: அபிராமி அச்சகம், 158 ஆஸ்பத்திரி வீதி).
20 பக்கம், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.
1986 பெப்ரவரி 24இல் காலஞ்சென்ற முதுபெரும் நாட்டியக் கலைஞர் ஸ்ரீமதி ருக்மிணிதேவி அருண்டேல் அவர்களின் பன்முகப்பட்ட அரும்பணிகளையும், பரதக்கலை பற்றி அவர் கொண்டிருந்த கருத்துக்களையும் நினைவுகூரும்முகமாக இச்சிறு கட்டுரை எழுதப்பட்டுள்ளது. 1904ம் ஆண்டு பெப்ரவரி 29ம் திகதி மதுரை நடேச ஐயருக்கும் திருவையாறு சேஷம்மாளுக்கும் மகளாய்ப் பிறந்தவர் இவர். இங்கிலாந்தைச் சேர்ந்த சிட்னி அருண்டேல் என்பவரை 1920இல் திருமணம் புரிந்தவர். தேவதாசிகள் நடனம் எனச் சமகாலத்திலே ஒதுக்கப்பட்ட சதிராட்டத்தை பலரும் போற்றும் பரதநாட்டியமாக்கிய பெருமை இவருக்கே உரியது. கலாஷேத்திரம் என்னும் கலைக்கூடத்தை நிறுவி, வழிநடத்தியதுடன் தானே ஒரு கலைக் கோயிலாகத் திகழ்ந்தவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 78059).