தெணியான். மதுரை 625 004: எழுத்து, Siron Cottage, #1 ஜோன்ஸ்புரம் முதலாவது தெரு, பசுமலை, 1வது பதிப்பு, பெப்ரவரி, 2011. (சென்னை 600005: மணி ஆப்செட்).
127 பக்கம், விலை: இந்திய ரூபா 80., அளவு: 21.5×14 சமீ., ISBN: 81-904254-6-3.
மதுரை, எழுத்து வெளியீட்டாளர்களின் ஈழத்து நூல் வரிசையில் வெளிவரும் நான்காவது நூல் இதுவாகும். கொழும்பு ஞானம் மாத இதழில் வாழ்வனுபவத் தொடராக தெணியான் எழுதிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இதுவாகும். ஞானத்தில் இடம்பெறாத மேலும் மூன்று கட்டுரைகளையும் சேர்த்து இத்தொகுப்பு வெளிவந்துள்ளது. கடந்த நாற்பதாண்டுகளை ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கு உயிர்ப்புடன் வழங்கிய தெணியான் தன் இளமைக்காலம் தொடங்கி, ஆசிரியராகப் பணியாற்றிய காலம் வரை தனது வாழ்வனுபவங்களை சுவைபடவும் பகிடியாகவும் இக்கட்டுரைகளின் வழியாகப் பகிர்ந்துகொள்கிறார். அனுபவக் கதைகளினூடாக எம்மையும் தம் இளமைக்கால வடமராட்சி மண்ணிற்கு கைப்பிடித்து அழைத்துச்செல்கிறார். தனது பெருமைகளையன்றி தான் விட்ட தவறுகளை, இயலாமையை இந்நூல்வழியே பகிர்ந்து ஒரு எழுத்தாளனின் யதார்த்த வாழ்வை நேர்மையுடன் தரிசிக்கவைக்கிறார்.