8876 நானும் நீயும்: முகத்தார் எஸ்.யேசுறட்ணம் அவர்களின் கலைத்துறை வரலாறு.

எஸ்.யேசுறட்ணம் (மூலம்), வண்ணை தெய்வம் (தொகுப்பாசிரியர்). பிரான்ஸ்: ஜீவா-மரியதாஸ், 2, Rue de L’Egalite, 95500 Gonasse,  இணை வெளியீடு, ஐரோப்பிய தமிழ் கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், பிரான்ஸ், 1வது பதிப்பு, மார்கழி 2011. (பிரான்ஸ்: கொப்பி லாசப்பல், பாரிஸ்).

128 பக்கம், வண்ணப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.

முகத்தார் வீடு என்ற இலங்கை வானொலி நாடகத்தின் பிரபல்யத்தால், முகத்தார் என்ற தனது பாத்திரப் பெயரையே தனதாக்கிக்கொண்டு வாழ்ந்த ஈழத்துக் கலைஞரான முகத்தார் எஸ்.ஜேசுரத்தினம் பற்றியும் அவரது பொதுவாழ்வு பற்றியும் அவருடன் நெருங்கிப்பழகிய மதியழகன், டேவிட் ராஜேந்திரன், விக்கி நவரட்ணம், அன்ரன் செல்வக்குமார், கே.பி.லோகதாஸ், ரி.ராஜகோபால், கல்லாறு சதீஷ், பொன்மணி குலசிங்கம், கலா லோகநாதன் ஆகியோரின் நினைவுப்பதிகைகளுடன் தொடரும் இந்நூலில் கேள்வியும் நானே பதிலும் நானே, என் மனைவிக்கோர் கடிதம், திரும்பிப் பார்க்கின்றேன், கலை வாழ்க்கையில் என்னுடன் இணைந்தவர்கள், பூவாடை வீசிவரும் தமிழ் ஓடை அமுது அண்ணா ஆகிய தலைப்புகளில் எஸ்.யேசுறட்ணம் எழுதிய ஆக்கங்களும், கலையும் தொண்டும் யேசுறட்ணம்காட்டிய நல்வழிகள் (சா.ஜே.வே.செ.சந்திரகாசன்), நீங்கள் மறையவில்லை எங்கள்… (தேன்மொழி) ஆகிய ஆக்கங்களும் இடம்பெற்றுள்ளன. பக்கங்கள் தோறும் எஸ்.யேசுறட்ணம் அவர்கள் தொடர்பான வண்ணப் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Thunderstruck Game

Articles All you have to Play Thunderstruck Pure Stories: The new Wildest Pranks Ever before Removed If you prefer Thunderstruck Stormchaser Position You should also