வலன்ரீனா இளங்கோவன், சு.இளங்கோவன் (தொகுப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: யாழ் வெற்றிமணி, 1வது பதிப்பு, 2012. (யாழ்ப்பாணம்: Andra Digital Printers).
96 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.
மு.க.சு. சிவகுமாரன் தனது தந்தையார் மு.க.சுப்பிரமணியம் இலங்கையில் தொடக்கிவைத்த வெற்றிமணி சஞ்சிகையை தான் புலம்பெயர்ந்து வாழும் ஜேர்மன் நாட்டில் மற்றுமொரு தளத்திற்கு இட்டுச் சென்றவர். சிறந்த சிற்ப, ஓவியக்கலைஞரான சிவகுமாரனின் படைப்பாற்றலின் வெளிப்பாடுகள் வெற்றிமணியை புகலிடத்திலும், பின்னர் தாயகத்திலும் இன்றளவில் நிலைநிறுத்தியுள்ளன. அவரது மணிவிழாவை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட சிறப்பிதழ் இதுவாகும். ஆறு திருமுருகன், மு.இராதாகிருஷ்ணன், க.சிவதாசன், மதிவாணி விக்னராஜா, நவநிதி சுப்பிரமணியம், பொ.கனகசபாபதி, அ.சண்முகதாஸ், எஸ். திருச்செல்வம், வ.கிருஷ்ணசாமி, சி.தயாபரன், சுபோதினி சபாரத்தினம், சந்திரவதனி ஸ்கந்தகுமார், ரதி சந்திரநாதன், கலா சுந்தரேசன், நகுலா சிவநாதன், கதிர் துரைசிங்கம், க.முருகதாசன், மனோன்மணி சண்முகதாஸ், சுபாஜினி உதயராஜா, ஆர்.என்.லோகேந்திரலிங்கம், வி.கந்தவனம், எஸ்.ரி.அருள்குமரன், நிருதா தங்கராஜா, வலன்ரீனா இளங்கோவன் ஆகியோரின் பார்வையில் மு.க.சு.சிவகுமாரன் பற்றிய பதிவுகள் வாழ்த்துக்களுடன் இடம்பெற்றுள்ளன. மேலும் வெற்றிமணியின் வெளியீட்டுப் பாரம்பரியம் என்ற தலைப்பில் மு.க.சுப்பிரமணியம் முதல் மு.க.சு.சிவகுமாரன் வரையிலான வெளியீட்டுத்துறை வரலாறு பற்றிய விரிவான பதிவொன்றும் நூலியலாளர் என்.செல்வராஜா அவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.