தி.ஞானசேகரன். கொழும்பு 6: ஞானம் பதிப்பகம், 3B, 36வது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 48B, புளுமெண்டால் வீதி).
(4), 80 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 300., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-8354-46-9.
இலங்கை அரசின் உயர்விருதான சாகித்திய ரத்னா விருதினைப் பெற்ற ஈழத்துப் படைப்பிலக்கியவாதியான செங்கை ஆழியான் க.குணராஜாவுடன், ஞானம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் வைத்திய கலாநிதி தி.ஞானசேகரன் ஒரு விரிவான நேர்காணலை மேற்கொண்டு ஞானம் சஞ்சிகையில் அதனைத் தொடராகப் பிரசுரித்திருந்தார். அதன் நூல்வடிவம் இதுவாகும். 46 நாவல்களையும், ஆறு சிறுகதைத் தொகுதிகளையும், 8 பல்சுவைக் கட்டுரைகளையும் பல்வேறு தொகுப்பு நூல்களையும் இதுவரை தந்தவரான செங்கை ஆழியானின் படைப்பிலக்கியப் பணி இன்னமும் தடையின்றித் தொடர்கின்றது. இந்நேர்காணல் வழியாக அவரது இலக்கியத்தேடலின் ஆழமும் அகலமும் வெளிக்கொணரப்பட்டுள்ளன.