மலர்க்குழு. தெல்லிப்பழை: தெல்லிப்பழைக் கலை இலக்கியக் களம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2010. (கொழும்பு 6: குளோபல் கிராப்பிக்ஸ், இல. 14, 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை).
vii, 235 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 26×18 சமீ.
எழுத்தாளர், சீர்மியர், இலக்கிய கலா வித்தகர், நாடக கலாவித்தகர், கலைச்சுடர் திருமதி கோகிலா மகேந்திரனின் 60ஆவது அகவை நிறைவின்போது வெளியிடப்பெற்ற சிறப்பு மலர் இது. முதற்பகுதியான குயிலின் பார்வையில் சோலை என்ற பகுதியில் இவரது பல்வேறு தேர்ந்த படைப்புகள் காலக்குறிப்புடன் இடம்பெற்றுள்ளன. கட்டுரைகள், கதைகள், தொடர்கதைகள், கவிதைகள், உரைகள், நாடகங்கள், உரைச் சித்திரங்கள், நற்சிந்தனைகள், விமர்சனங்கள், வழிகாட்டல்கள், வரலாற்றுத் தொகுப்புகள் என்று பல்பரிமாணங்களில் இவை தேர்வுக்குள்ளாகிப் பதிவாகியுள்ளன. இடைவெளி நிரப்பிகளாக (fillers) இவர் பெற்ற கல்வித் தகைமைகள், தொழிற் தகைமைகள், தொழில் அனுபவங்கள், இவரது படைப்புக்கள் பெற்ற பரிசில்கள், விருதுகள், பாராட்டுகள் என்பன இடம்பெற்றுள்ளன. சோலையின் பார்வையில் குயில் என்ற இரண்டாவது பகுதியில் கோகிலா மகேந்திரன் என்ற குயில் வாழ்கின்ற சோலையாகிய சமூகத்தில் உள்ள படைப்பாளிகள், அறிஞர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், அதிகாரிகள், பேராசிரியர்கள், மாணவர்கள், ரசிகர்கள், ஊடகங்கள், முதலான சமூகப் பிரதிநிதிகள் இவரது ஆற்றலைப் பற்றியும் இவரது படைப்புகள் பற்றியும் பல்வேறு காலகட்டங்களில் விதந்து வழங்கிய பார்வைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இடைவெளி நிரப்பிகளாக (கடைடநசள) இவர் ஆற்றிய உரைகளின் குறிப்புகள், எழுதிய கட்டுரைகளின் கனதியான வரிகள், நிகழ்த்திய கலைநிகழ்வுகளின் தகவல்கள் என்பன தரப்பட்டுள்ளன.