தமிழ்மணி தெல்லியூர். (இயற்பெயர்: செ.நடராசா). யாழ்ப்பாணம்: தெ.செ.ந. கனகவேல்ராசா, தமிழ்மணிப் பதிப்பகம்,வேலகம், 11/1 குமாரசாமி வீதி, 1வது பதிப்பு, 1961.(அச்சக விபரம் தரப்படவில்லை).
24 பக்கம், விலை: ரூபா 25.00, அளவு: 18×12 சமீ.
புலவர்மணி நவாலியூர் க.சோமசுந்தரப் புலவர் அவர்களது வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூல். தெல்லியூர் செ.நடராசா அவர்கள் முன்பு பல பத்திரிகைகளிலும் ஹஜதரன், தமிழ்மகன், யாழரசன், முல்லை முருகன், தெ.செ.ந. ஆகிய புனைபெயர்களில் எழுதியிருந்த கட்டுரைகளைத் தொகுத்து இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. புலவர்மணி சோமசுந்தரப் புலவரின் நாமகள் ஆசைப்பத்து, நாமகள் திருப்பள்ளி எழுச்சி, நாமகள் ஆசிரிய விருத்தம், நாமகள் அலங்காரம், செந்தமிழ்ச் செல்வி ஆகிய பாடல்கள் அனுபந்தமாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இந்நூலைப் பதிப்பித்தவர் தெல்லியூர் நடராசாவின் மகனாவார்.