8894 தென்னாசியா: கட்டுரைத் தொகுப்பு.

எஸ்.கே.எஸ்.நாதன்  (தொகுப்பாசிரியர்). சுவிட்சர்லாந்து: எஸ்.செந்தூர்நாதன், Uster Str 5, 8133 Esslingan, 1வது பதிப்பு, ஆனி 2003. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430 காங்கேசன்துறை வீதி).

(6), 211 பக்கம், வரைபடங்கள், விலை: ரூபா 200., அளவு: 20×14.5 சமீ., ISBN: 955-1013-74-3.

தென்னாசியா: கட்டுரைத் தொகுப்பு.

எஸ்.கே.எஸ்.நாதன்  (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: அரசறிவியல்-சமூகவியல்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 2வது பதிப்பு, ஏப்ரல் 2006, 1வது பதிப்பு ஆனி 2003).

190 பக்கம், வரைபடங்கள், விலை: ரூபா 250., அளவு: 21.5×15 சமீ.

இந்நூலாசிரியர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின்  பொருளியற்றுறையின் தலைவராகவிருந்து ஓய்வுபெற்றவர். இந்நூலில் தென்னாசியா தொடர்பான ஏழு கட்டுரைகளைத் தொகுத்து வழங்கியிருக்கிறார். Area Studies: A South Asian Perspective (A.V.மணிவாசகர்), தென்னாசியா: ஓர் அறிமுகம் (கா.குகபாலன்), இந்திய அரசியல் (எஸ்.கே.எஸ்.நாதன்), போலோ பிறீறியின் ஒடுக்குமுறை மீட்புக் கல்விச் சிந்தனைகளும் தென்னாசிய நாடுகளுக்கான பொருத்தப்பாடும் (சபா. ஜெயராசா), தென்னாசியாவின் அடையாளக் கட்டுமான நிர்மாணத்தில் தொல்லியற் பண்பாடு: விளக்கமும் விளைவுகளும் (செ.கிருஷ்ணராஜா), முரண்பாட்டு அரசியல் கலாச்சாரம் தென்னாசியா பற்றி ஒரு நோக்கு (கே.ரி.கணேசலிங்கம்), தென்னாசிய பிராந்திய ஒத்துழைப்பிற்கான கூட்டமைப்பினர் (எஸ்.கே. எஸ்.நாதன்)  ஆகிய ஏழு கட்டுரைகள் இதில் அடங்கப் பெற்றன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  136702, 166124).

ஏனைய பதிவுகள்