8895 மகாவம்ச.

வில்ஹெம் கெய்கர் (ஆங்கில மூலம்), எஸ்.பொன்னுத்துரை (தமிழாக்கம்) . சென்னை 600024: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 32/9 ஆர்க்காடு சாலை, கோடம்பாக்கம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2009. (சென்னை 600024: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 32/9 ஆர்க்காடு சாலை).

xxxii, 368 பக்கம், வரைபடங்கள், விலை: இந்திய ரூபா 350., அளவு: 22.5×14.5 சமீ., ISBN: 978-81-89748-80-7.

Mahavamsa or The Great Chronicle of Ceylon என்ற பெயரில் Wilhelm Geiger ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துவைத்த சிங்களவர்களின் வரலாற்று நூலின் தமிழாக்கம் இது. ததாகதரின் வருகை, மகாசம்மத குலம், முதலாவது மகாசபை, இரண்டாவது மகாசபை, மூன்றாவது மகாசபை, விஜயவின் வருகை, விஜய நிவேதிக்கப்படுதல், பாண்டுவாசுதேவ நிவேதிக்கப்படுதல், அபய நிவேதிக்கப்படுதல், பாண்டுகாபய நிவேதிக்கப்படுதல், தேவநாம்பியதீஸ நிவேதிக்கப்படுதல், பல்வேறு நாடுகளை மாற்றுதல், மஹிந்தவின் வருகை, தலைநகர் புகுதல், மஹாவிஹாரவை ஏற்றல், செய்தியமலை சிஹாரவை ஏற்றல், ஞாபகச் சொத்துக்களின் வருகை, மாபோதி மரத்தைப் பெறுதல், போதிமர வருகை, தேரரின் நிப்பாண, ஐந்து அரசர்கள், இளவரசன் காமணியின் பிறப்பு, போர்வீரர்கள் சேர்த்தல், இரு சகோதரர்களின் யுத்தம், துட்டகாமணியின் வெற்றி, மரிசவதி விஹாரவைப் புனிதப்படுத்தல், லோகபாசாதவைப் புனிதப்படுத்தல், மகா ஸ்தூப கட்டுவதற்கான சாதனங்கள் பெறுதல், மகா ஸ்தூபவின் துவக்கம், ஞாபகச் சொத்துக்கான மண்டபம் உருவாக்குதல், ஞாபகச் சொத்துக்களின் பிரதிஷ்டை, துசித சொர்க்கம் புகுதல், பத்து மன்னர்கள், பதினொரு மன்னர்கள், பன்னிரெண்டு மன்னர்கள், பதிமூன்று மன்னர்கள், மன்னன் மகாசேன ஆகிய 37 தலைப்புகளில் மகாவம்ச எழுதப்பட்டுள்ளது. பின்னிணைப்பாக இலங்கையை அரசாண்ட பண்டைய மன்னர்கள் பட்டியல், பாண்டுகாபய-துட்டகாமணி செய்த போர் ஏற்பாடுகள், பாளிச் சொற்களுக்கான சில விளக்கம் ஆகிய மூன்றும் இடம்பெற்றுள்ளன. பண்டைய இலங்கை, அநுராதபுரம் ஆகியவற்றின் வரைபடங்களும் நூலில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

11654 பொன்மலர்கள்.

ஆ.பொன்னையா. அல்வாய்: ஆ.பொன்னையா, பாரதி, அல்வாய் மேற்கு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1976. (யாழ்ப்பாணம்: கவின் அச்சகம், 122, நாவலர் வீதி). (8), 92 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17.5×12 சமீ. வடமராட்சிக்

9975 வரலாற்றைத் தொலைத்த தமிழர்: மெசொபொத்தேமியாவிலிருந்து ஈழம் வரை.

நிவேதா உதயராயன். சென்னை: கிரீன் புக்ஸ், 8V, அழகிரி நகர் 4வது தெரு, லட்சுமிபுரம், வடபழநி, 1வது பதிப்பு, 2014. (சென்னை:அச்சக விபரம் தரப்படவில்லை). 64 பக்கம், விலை: இந்திய ரூபா 40., அளவு: