8896 மாமன்னன் இலங்கேஸ்வரன்.

இ.க.அரியரத்தினம்  (இயற்பெயர்: இலங்கையர் கனகசபை அரியரத்தினம்). தமிழ்நாடு: புகழ்ச் செல்வி பதிப்பகம், 2/99, அண்ணா தெரு, மகிழ்வூர் (சந்தோசபுரம்), சென்னை 73, 1வது பதிப்பு, பங்குனி 2010. (சென்னை 73: புகழ்ச்செல்வி பதிப்பகம்).

320 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

இலங்கை வேந்தன் இராவணேஸ்வரன் பற்றிய வரலாற்று ஆய்வு நூல். இராவணன் பத்துத் தலைகளைக் கொண்டவனல்ல. அவன் ஒரு பதினகர் கவனகர். அவன் ஓர் அரக்கனல்ல. அவன் ஒரு தமிழரசன். அவனால் கவர்ந்து வரப்பட்டவளல்ல சீதை என்றும் அவளை சூர்ப்பனகையே கவர்ந்துசென்றாள் என்றும் தன் ஆய்வு முடிவுகளை வெளிப்படுத்துகின்றார். மேலும் அனுமான் ஒரு குரங்கல்ல என்றும் அவன் ஒரு தமிழனே என்றும் சீதை அசோகவனத்தில் கொடுமைப்படுத்தப்படவில்லை என்றும் ஆசிரியர் தன் முடிவுகளை வெளிப்படுத்தியுள்ளார். கனகசபை அரியரத்தினம் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைப்பெற்றவர். கொழும்பு வெஸ்லி கல்லூரியில் கணக்கியல்துறை ஆசிரியராகப் பணியாற்றியவர். பின்னர் புலம்பெயர்ந்து பிரான்சில் வசிக்கும் இவர். வானொலி, தொலைக்காட்சி ஊடகவியலாளராகப் பணியாற்றுகிறார்.

ஏனைய பதிவுகள்